
விஜய் சேதுபதி நடிக்கும் மௌனப் படம் காந்தி டாக்ஸ்
அடுத்து விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படமான "காந்தி டாக்ஸ்" படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மராத்தியில் இதற்கு முன் "சா சசுச்சா, யெதா" ஆகிய படங்களை இயக்கிய கிஷோர் பாண்டுரங் பெலேகர் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படம் பற்றி டுவிட்டரில், “சில நேரங்களில் மௌனம் தான் அதிகம் ஒலிக்கும். எனது பிறந்தநாளை முன்னிட்டு, எனது அடுத்த படத்தின் போஸ்டரை வெளியிடுகிறேன். "காந்தி டாக்ஸ்", ஒரு புதிய சவால் மற்றும் ஆரம்பம் எனக்காக....தயாராக இருக்கிறேன், உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்,” என விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.
சில இடங்களில் சில விஷயங்கள் நடக்க பணம் இருந்தால் தான் முடிக்க முடியும். அப்போது "பணம் பேசும்" என்று சொல்வதற்குப் பதிலாக பலர் "காந்தி பேசும்" என வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள். அதையே ஆங்கிலத்தில் "காந்தி டாக்ஸ்" என படத்தின் தலைப்பாக வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தி, மராத்தி என மொத்தம் ஆறுமொழிகளில் இப்படம் தயாராக உள்ளதாம்.
"காந்தி" பெயரை எப்படி இது போல பயன்படுத்தலாம் என யாரும் சர்ச்சை எழுப்பாமல் இருப்பார்களா ?.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!