
தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை
இதற்கு முன்பு ரவிதேஜா தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வந்தார். நான் அவருடன் இணைந்து நடித்துள்ள இந்த கிராக் படம்தான் அவருக்கு நீண்ட இடைவேளைக்குப்பிறகு வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
அதேபோல், பவன்கல்யாண் வரிசையாக மூன்று தோல்வி படங்களை கொடுத்து வந்தார். அப்போது கப்பார் சிங் படத்தில் அவருடன் நான் ஜோடி சேர்ந்த பிறகுதான் அப்படம் ஹிட்டாக அமைந்தது.
அவரைப்போலவே மகேஷ்பாபுவும் பல தோல்விப் படங்களை கொடுத்து வந்தார். அவருடன் நான் ஸ்ரீமந்துடு என்ற படத்தில் இணைந்த நடித்தபோது அப்படம் ஹிட் அடித்தது. ஆக, தெலுங்கு சினிமாவில் முன்வரிசை ஹீரோக்களுக்கு நான் ஒரு லக்கி ஹீரோயினாக இருக்கிறேன் என்றொரு செய்தி வெளியிட்டு, தான் ஒரு ஹிட் படநாயகி என்பதை டோலிவுட்டிற்கு நினைவு கூர்ந்துள்ள ஸ்ருதிஹாசன், தற்போது பவன்கல்யாணுடன் வக்கீல் சாப் படத்தில் நடிக்கிறேன். இந்த படமும் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!