
அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி
இதுகுறித்து சமுத்திரகனி வெளியிட்டுள்ள செய்தியில், அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதற்காக அப்படத்திற்கு உரையாடல் எழுதும் திரிவிக்ரம் என்னை அணுகி, உங்களுக்கு ஒரு நல்ல கேரக்டரை உருவாக்கியுள்ளேன். கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனது கேரக்டர் பற்றி இன்னும் முழுமையாக எனக்கு தெரியாது என்றபோதும், மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் என்பதால் சம்மதம் சொல்லி விட்டேன் என்று கூறியுள்ள சமுத்திரகனி, ஜனவரி இறுதியில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் சொல்கிறார். இப்படத்தை சாகர் கே.சந்திரா இயக்குகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!