
பிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா
இந்தநிலையில் லூசிபர் படத்தின் கதையிலும், கதாபாத்திரங்களிலும் சில மாற்றங்களை செய்துள்ளாராம் மோகன்ராஜா. குறிப்பாக மோகன்லாலின் வலது கையாக நடித்திருந்த சயீத் மசூத் என்கிற பிரித்விராஜின் கதாபாத்திரமே தெலுங்கு ரீமேக்கில் இடம் பெறாதவாறு தூக்கிவிட்டார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த கேரக்டரில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணோ அல்லது ஏதோ ஒரு இளம் முன்னணி நடிகரோ நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த கதாபாத்திரமே நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவதாக இருக்கிறது.
மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த அந்த கதாபாத்திரம் பல இடங்களில் மோகன்லாலை டாமினேட் செய்வது போல உருவாக்கப்பட்டிருந்தது. மோகன்லாலும் சரி, அவரது ரசிகர்களும் சரி அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆனால் தெலுங்கில் சிரஞ்சீவியின் கதாபாத்திரத்தை அது டேமேஜ் செய்யும் வாய்ப்பு இருப்பதால், அவரது ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் தான் மோகன்ராஜா அதை நீக்கி விட்டார் என்றே தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!