
இரண்டு மாத மந்த நிலையை மாற்றும் மாஸ்டர்
முன்னணி நடிகர்களின் படங்கள் தான் ரசிகர்களை வரவழைக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கம். விஜய் நடித்து வெளிவர உள்ள "மாஸ்டர்" படத்திற்கான முன்பதிவு ஆரம்பமானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
13ம் தேதி புதன்கிழமை வெளியாகும் படத்திற்கு 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு ஏறக்குறைய முன்பதிவு முடிந்துவிட்டது. முக்கிய மாநகரங்கள், நகரங்களில் ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இருக்கைகள் காலியாக உள்ளன. அவையும் அடுத்த சில நாட்களில் நிறைந்துவிடும் என்கிறார்கள்.
கொரோனா தொற்று பயத்தையும் மீறி "மாஸ்டர்" படத்திற்கு இப்படி ஒரு முன்பதிவு நடப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையிலும் முன்பதிவு நிலவரம் நிறைவாக உள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!