
முதல் காட்சியே ஐஸ்வர்யா ராயுடன் நடித்ததில் மகிழ்ச்சி : ரகுமான்
இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரகுமான், இந்த தகவலை உறுதி செய்துள்ளார். முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனுபவத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ள ரகுமான், “பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொண்டுள்ளேன்.. முதல்நாள் முதல் காட்சியே, ஐஸ்வர்யா ராயுடன் நடித்ததில் மிகப்பெரிய சந்தோஷத்தில் இருக்கிறேன். படக்குழுவினர் உத்தரவு காரணமாக புகைப்படங்களை பகிர முடியவில்லை நண்பர்களே” என குறிப்பிட்டுளார். நடிகர் ரகுமான் மணிரத்னம் டைரக்சனில் நடிப்பதும், ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடிப்பதும் இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தகது. .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!