
நடிகரான இர்பான் பதானுக்கு கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து
கிரிக்கெட் வீரர்கள் பலரும் விளம்பரப் படங்களில் நடித்தே கோடி கோடியாக சம்பாதித்துள்ளார்கள். ஆனால், சினிமாவில் நடிக்க அவர்கள் அதிக ஆர்வம் காட்டியதில்லை.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான குஜராத்தைச் சேர்ந்த இர்பான் பதான் "கோப்ரா" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். சில தினங்களுக்கு முன்பு வெளியான அந்த டீசர் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் இர்பான் பதானுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விவிஎஸ் லட்சுமண், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் அவருடைய சினிமா அறிமுகத்தை பாராட்டியுள்ளனர்.
இர்பான் பதானைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் "டிக்கிலோனா, பிரண்ட்ஷிப்" ஆகிய மிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இரண்டுமே விரைவில் வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!