
மாஸ்டர் முன்பதிவு - கொரோனாவை பொருட்படுத்தாத ரசிகர்கள்
இந்நிலையில் படத்திற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் டிக்கெட் முன்பதிவு செய்ய ரசிகர்கள் முண்டியடித்தனர். மன்னன் படத்தில் ரஜினி - கவுண்டமணி தியேட்டரில் டிக்கெட் வாங்குவார்களே.... அதுபோன்று சில ரசிகர்கள் கூட்டமாக டிக்கெட் கவுன்டர் மேல் ஏறி நின்ற போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. கொரோனா பிரச்னை இன்னும் முழுமையாக தீராத போது ரசிகர்கள் இது போன்று கூட்டமாக கூடியதும், சமூக இடைவெளியை பின்பற்றாமல், மாஸ்க் கூட அணியாமல் இவர்கள் இது போன்ற செயல்களை செய்வதை என்னவென்று சொல்வது என பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!