
நள்ளிரவு, அதிகாலை காட்சிகளுக்குத் தயாராகும் மாஸ்டர்
பொதுவாக, முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது கூடுதலாக அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். அதிகாலை 4 மணிக்கோ அல்லது 5 மணிக்கோ காட்சிகள் ஆரம்பமாகும். அதன்பின் 7 அல்லது 8 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் நடக்கும். படம் வெளியான சில நாட்களுக்கு தினசரி 6 காட்சிகள் வரை நடைபெறம்.
தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து கூடுதலாக நள்ளிரவு 1 மணி காட்சியை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அதனால், "மாஸ்டர்" படம் வெளியாகும் 13ம் தேதியிலிருந்து 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி 6 அல்லது 7 காட்சிகள் வரை நடைபெறலாம் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
பல ஊர்களில் நள்ளிரவு 1 மணி காட்சி மற்றும் அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெறுதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!