
துக்ளக் தர்பார் படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்போது படத்தின் நாயகி ராஷி கண்ணா இப்படத்திற்கான அவருடைய படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இது குறித்து, “சூப்பர் திறமைசாலியான விஜய் சேதுபதி உடன், மற்றுமொரு அழகான பயணம் "துக்ளக் தர்பார்" நிறைவுக்கு வந்தது. மறக்க முடியாத இப்படத்தைக் கொடுத்த இயக்குனர் தீனதயாளன், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர், அனைவருக்கும் நன்றி. படத்தை நீங்கள் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ராஷி கண்ணா நடிக்கும் ஐந்தாவது படம் இது. "சங்கத்தமிழன்" படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!