
எக்கோவில் இணைந்த பூஜா ஜவேரி
5 வருடத்திற்கு முன்பு சினிமாவில் அறிமுகமானாலும் சரியான அங்கீகாரம் பூஜாவுக்கு கிடைக்கவில்லை. தற்போது தமிழில் 8 என்ற படத்தில் நடித்து வரும் அவர், ஸ்ரீகாந்த் நடிக்கும் எக்கோ படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப் படத்தில் வித்யா பிரதீப் ஒரு நாயகியாக நடித்து வருகிறார். மற்றொரு நாயகியாக பூஜா இணைந்திருக்கிறார்.
இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார். கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது பூஜா ஜாவேரி, ஸ்ரீகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசையமைக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!