
பிப்ரவரியில் நயன்தாரா திருமணம், வதந்தியா, உண்மையா ?
கடந்த ஐந்து வருடங்களாக காதல் பறவைகளாக பல நாடுகளையும் சுற்றி வந்துள்ளது இந்த காதல் ஜோடி. இருவரும் சென்னையில் ஒரே பிளாட்டில்தான் கடந்த சில வருடங்களாக வசிக்கிறார்கள்.
புத்தாண்டை முன்னிட்டும் ஜோடியாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பொறாமையை ஏற்படுத்தினார்கள். இந்த ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்ளும் என்று பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்போது இருவருக்கும் பிப்ரவரி மாதம் முறைப்படி திருமணம் நடக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது வழக்கம் போல வதந்தியா அல்லது உண்மையா என்பது விரைவில் தெரிய வரும்.
சினிமா நட்சத்திரங்களின் காதல் திருமணங்கள் எப்போதுமே திடீரென்றுதான் நடக்கும். அது போல இந்தத் திருமணமும் திடீரென நடக்குமா அல்லது அனைவரையும் அழைத்து நடத்துவார்களா ?.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!