
அமெரிக்காவில் தமிழ் அமைப்பு மாநாடு : திரைப்பட விழா, ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடக்கிறது
தமிழகத்தை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். கலைத்துறையை பொருத்தமட்டில் ஜூலை 2ம் தேதி பெட்னா சர்வதேச திரைப்பட திருவிழா நடக்கிறது. இதில் சிறந்த திரைக்கலைஞர்களின் படைப்புகள் கவுரவிக்கப்பட உள்ளது. இதில் விதார்த், தங்கர் பச்சான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஜூலை 3ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் கவியரங்கம் நடக்கிறது. இதில் லெனின் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஜூலை 4ம் தேதி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. தவிர்த்து புகழ், ஹேமா, சுஜிதா உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!