
கார்கி படத்தை நிராகரித்தது ஏன்? ஐஸ்வர்யா லக்ஷ்மி விளக்கம்!
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி அளித்த பேட்டியில், சாய்பல்லவி நடித்த "கார்கி" படத்தை நிராகரித்தது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "முதலில் கார்கி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு என்னை தேடி வந்தது. ஆனால், அந்த கதையை கேட்ட பிறகு அந்த சமயத்தில் என்னை விட பெரிய நடிகை நடித்தால் தான் நல்லா இருக்கும். அது அந்த இயக்குனருக்கும் நல்லது என நினைத்து, வேண்டாம் என்றேன். ஒருவேளை இப்போது நான் இருக்கும் நிலையில் கார்கி படம் வந்திருந்தால் நான் நடித்திருப்பேன்"" என்றார். மேலும், கார்கி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!