
தமிழில் வில்லனாக அறிமுகமாகும் தெலுங்கு நடிகர்
இந்த நிலையில் சூரி நடிக்கும் "மண்டாடி" படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அவரது தோற்றத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். ஆர்.எஸ் இன்போடையிமெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், மிதுன், பாலசரவணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இதில் சுஹாஸ், படத்தின் வலிமைமிக்க வில்லன் கதாபாத்திரமான "சாட்டப்புலி"யாக நடிக்கிறார். தமிழ்நாட்டின் கடலோர சமூகங்களின் பின்னணியையும், பாய்மரப் படகுப் பந்தயத்தையும் மையமாகக் கொண்ட "மண்டாடி" திரைப்படம், செப்டம்பரில் வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!