
ஜனநாயகன் தயாரிப்பாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு
அவர் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பாலமான செயல்பட வேண்டிய ஒரு பதவியில் தமிழர் அல்லாத கன்னடரான வெங்கட் நாராயணாவை நியமித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இவர் கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் டி.கே. சிவக்குமார் உறவினர் என்றும் சொல்கிறார்கள்.
ஜூன் 23ம் தேதி அவரது பதவிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை அன்றே வெளியிடாமல் இருந்ததற்கான காரணம் என்னவென்றும் கேள்வி எழுந்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக வலைத்தளங்களிலும் பலரும் அவர்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை, அதுவும் சினிமா தயாரிப்பாளரை இப்படிப்பட்ட பதவியில் நியமிப்பதா என அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!