
ஐட்டம் சாங் என சொல்லாதீர்கள் : தமன்னா காட்டம்
சமீபத்தில் ஒரு பேட்டியில் தமன்னா கூறும்போது, "திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களை "ஐட்டம் சாங்" என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை. அந்த சொல் பெண்களுக்கு மரியாதைக்குரியது அல்ல. ஒரு பாடலுக்காக நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும்.. அதை "ஐட்டம்" என்று அழைப்பது அந்தப் பெண்ணின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை அல்ல. இந்த அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். நடிகைகளை வெறும் கவர்ச்சி பொருளாகப் பார்க்காமல் அவர்களின் நடிப்பு திறமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!