
பத்மபூஷன் விருது : அர்ப்பணித்த மம்முட்டி
பின்னர் தனது எக்ஸ் தளத்தில் விருது பெற்றுக் கொண்டது குறித்து, “பத்மபூஷண் விருது எனக்கு வழங்கப்பட்டதற்காக நான் ஆழ்ந்த பணிவுடனும், மரியாதையுடனும் இருக்கிறேன். இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்திற்காக இந்திய அரசுக்கு என் உண்மையான நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இத்தகைய ஒரு விருது, உங்களைப் போன்ற அற்புதமான ரசிகர்கள் இல்லாமல் இருக்க முடியாது. ஐந்து தசாப்தங்களாக நீண்ட பயணத்தின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு நாளும் என்னைத் தொடர்ந்து முன்னேறச் செய்யும் எல்லையற்ற அன்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கு நன்றி. இதை அழகிய திரைப்பட உலகத்திற்கும், உங்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
நிகழ்வு முடிந்த பின்பு நடிகர் மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் உள்ளிட்ட குடும்பத்தினர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!