
முதல்வர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன், அவர் சொல்வாரா?
நடிகரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கமல்ஹாசன் கூட வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் வாழ்த்து சொல்வராக என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த அவர் நடிகர் ரஜினிகாந்த். இதுவரையில் எந்த ஒரு வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.
தேர்தல் முடிவு வந்த அன்று மட்டும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த். அதன்பின் அவர் முதல்வராகப் பதவியேற்ற பின்பு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.
தேர்தலுக்கு முன்பாக ஆதவ் அர்ஜுன், ரஜினிகாந்த்தைப் பற்றி விமர்சித்தது ரஜினி தரப்பில் கோபத்தை ஏற்படுத்தியது. அதற்கு சில அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
அதே சமயம் "ஜனநாயகன்" படம் திருட்டுத்தனமாக இணையங்களில் வெளியான போது தனது எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்திருந்தார் ரஜினிகாந்த்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!