
ருக்மணி வசந்தின் டீப் பேக் புகைப்படங்களை வெளியிட்ட 3 பேர் கைது!
தமிழில் "ஏஸ், மதராசி" மற்றும் கன்னடத்தில் "காந்தாரா சாப்டர்-1" போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ருக்மணி வசந்த். தற்போது கன்னடத்தில் "டாக்ஸிக்", தெலுங்கில் "டிராகன்" என பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் யாரோ விஷமிகள் ருக்மணி வசந்த்தை பிகினி உடையில் இருப்பது போன்று புகைப்படங்களை வைரலாக்கினார்கள். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த ருக்மணி வசந்த், சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் போலீசார் இந்த டீப் பேக் புகைப்படங்களை வெளியிட்டது யார் என்பதை ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது கர்நாடகாவை சேர்ந்த சந்திரகாந்த், ரஞ்சித், ரவிக்குமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!