
அன்பே டயனா ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட மாவட்ட தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை அழுத்தமாக சொன்ன படம் "ஜமா". அதை இயக்கி நடித்தவர் பாரி இளவழகன். அவரின் அடுத்த படம் "அன்பே டயானா". வட சென்னை பின்னணியில் படம் நகர்கிறது. இந்த படம் ஜூலை 17 ரிலீஸ் ஆகிறது. பாரி இளவழகன் ஜோடியாக, "நீக்" (NEEK) பட ஹீரோயின் ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
"குட் நைட்", "டூரிஸ்ட் பேமிலி" போன்ற படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை வழங்குகிறது. காதல், குடும்பம் மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை கொண்டாடும், மனம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆங்கிலோ இந்தியன் பெண், வட சென்னை பையன் காதலை சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக தகவல்.
நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடுவார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!