
ஈகையில் ஆக் ஷன் ஹீரோயினாக அஞ்சலி
தமிழில் அவர் நடிக்கும் "ஈகை" என்ற படம் அவரது 50வது படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர "கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி" என்ற படமும் அஞ்சலியின் 50வது படம் என கூறப்பட்டது. அஞ்சலி சோலோ ஹீரோயினாக நடிக்கும் ஈகை படத்தை அசோக் வேலாயுதம் இயக்குகிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார், தரண் குமார் இசை அமைக்கிறார். பிருந்தா கிருஷ்ணா கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ண சந்திரன் ராமசபத்தரன் தயாரிக்கிறார்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இதில் அஞ்சலி ஆக்ஷன் ஹீரோயினாக நடிப்பதாக தெரிகிறது. "எதுவும் செய்யாமலாயே நீங்கள் நீதியை நிலைநாட்டலாம்" என்பது படத்தின் டேக் லைன்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!