
ஜனநாயகன் சென்சார் சிக்கல் : டில்லி சென்றுள்ள தயாரிப்பாளர்
நீதிமன்ற வழக்கு, ரிவைசிங் கமிட்டி, வழக்கு வாபஸ், தேர்தல் என அடுத்தடுத்த சில விஷயங்களால் படத்தின் வெளியீடு தாமதமாகிக் கொண்டே வருகிறது. தேர்தல் முடிவுகள் வந்த விஜய் முதல்வராகப் பதவியேற்ற பின்பு படத்திற்கான சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரையிலும் அதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் சென்சார் சிக்கலைத் தீர்க்க படத்தின் தயாரிப்பாளர் டில்லி சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்சார் அலுவலகத்தில் உள்ள தலைமை அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேச உள்ளதாகச் சொல்கிறார்கள்.
படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும் பணம் திருப்பித் தந்துவிட்டதாகவும் செய்திகள் உள்ளன. படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனமும் பின்வாங்கியதாகவும் சொன்னார்கள்.
இன்னும் சில நாட்களில் விஜய் பிறந்தநாள் வர உள்ளது. அதற்குள்ளாவது படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வருமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!