திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி
மே 22, 2026
Advertisement
ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் திரிஷ்யம் 3 படம் வெளியாகி உள்ளது. முதல் இரண்டு பாகங்கள் அளவுக்கு இந்தபடம் இல்லை என்ற விமர்சனம் பொதுவாக எழுந்துள்ளது. அதேசமயம் படத்திற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. முதல்நாளில் மட்டும் இப்படம் உலகளவில் 40 கோடி வரை வசூலித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் தொடர்பாக மோகன்லால் வெளியிட்ட பதிவில், ‛‛ ‛திரிஷ்யம் 3" அளவற்ற அன்பு, ஆர்வம் மற்றும் நன்றியுடன் உருவாக்கப்பட்டது. உங்கள் வரவேற்பின் வாயிலாக அந்த அன்பு எங்களுக்கே திரும்ப வருவதைக் காண்பது, நெஞ்சத்தை ஆழமாக நெகிழச் செய்வதாக அமைந்துள்ளது. உங்கள் விமர்சனங்கள், வார்த்தைகள் மற்றும் நீங்கள் பகிர்ந்த உணர்வுகள் எனக்கு எந்த எண்ணிக்கையையும் விட மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. படத்தைப் பார்த்ததற்கும், அதனுடன் இணைந்ததற்கும், ஒவ்வொரு தருணத்தையும் உணர்ந்ததற்கும், மற்றும் ஜார்ஜ்குட்டியையும் அவரது குடும்பத்தையும் உங்கள் சொந்தமாக ஏற்றுக்கொண்டதற்கும் மிக்க நன்றி"" என குறிப்பிட்டுள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!