பிளாஷ்பேக் : தமிழில் சினிமாவான ரஷ்ய நாடகம்
மே 21, 2026
Advertisement
ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான நிக்கோலாய் கோகோல் எழுதிய புகழ்பெற்ற நாடகம் "இன்ஸ்பெக்ட்டர் ஜெனரல்". இது ஹாலிவுட் உள்ளிட்ட பல மொழிகளில் நாடகமாகவும் நடத்தப்பட்டது, சினிமாவாகவும் தயாரிக்கப்பட்டது. தமிழில் "பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்" என்ற பெயரில் தயாரானது.
இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜா தேவி, எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.என்.லட்சுமி, டி.ஆர். ராமச்சந்திரன், டி.வி.குமுதினி, "குலதெய்வம்" ராஜகோபால், என். சந்தினி, டி. பாலசுப்பிரமணியம், டி. வி. நாராயணசாமி, பக்கிரிசாமி, "கொட்டப்புலிக் ஜெயராமன் ஆகியோர் நடித்தனர்.
கிராம பஞ்சாயத்தின் தலைவர் பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம் (சகஸ்ரநாமம்) மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார். பல்வேறு முறைகேடுகளை செய்கிறார். அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு மனு போடுகிறார்கள். அரசும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை அனுப்புகிறது. ஆனால் அந்த ஊருக்கு தற்செயலாக வரும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் அந்த இன்ஸ்பெக்டர் என நினைத்து மக்களை அவரை வரவேற்கிறார்கள். பஞ்சாட்சரம் அவரை பார்த்து பயந்து அவரை தன் மகளை காதலிக்க வைத்து தன் கைக்குள் போட்டுக் கொள்ள நினைக்கிறார். இந்த நிலையில் உண்மையான இன்ஸ்பெக்டர் அந்த கிராமத்திற்கு வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
பிற்காலத்தில் இந்த ஒன் லைனை வைத்துக் கொண்டு ஏராளமான படங்கள் வந்தது. இந்த படத்தை பீம்சிங் காமெடி படமாக இயக்கினார், சாவித்ரி பிக்சர்ஸ் தயாரித்தது. ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!