
விஜய் அமைச்சரவையில் சினிமாவிலிருந்து மூன்று பேர்
முதல்வராகப் பதவியேற்ற விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். முதல்வர் தாண்டி பல்வேறு துறை அமைச்சர் பொறுப்பும் விஜயிடம் உள்ளது. அடுத்து தமிழகத்தின் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற ராஜ்மோகன். அவர் 2023ல் வெளிவந்த "பாபா பிளாக் ஷீப்" என்ற படத்தை இயக்கியவர். பள்ளி மாணவ, மாணவியரைப் பற்றிய படமாக வெளிவந்த அந்தப் படம் ஓடவில்லை.
அடுத்து இன்று அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஸ்ரீநாத். அவர் நடிகராக பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், 2009ல் வெளிவந்த "முத்திரை", 2014ல் சந்தானம் நடித்து வெளிவந்த "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்", 2025ல் வெளிவந்த "லெக் பீஸ்" ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
சினிமாவிலிருந்து மூன்று பேர் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளதால் தமிழ் சினிமாவிற்கு சில நல்ல விஷயங்களை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை திரையுலகினருக்கு ஏற்பட்டுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!