
மனைவி உயிரை காப்பாற்ற கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை : முதல்வர் விஜய் நடவடிக்கை
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‛‛என் மனைவி மாலதி (வயது 47). மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக சென்னை, கீழ்பாக்கம் புது பில்டிங் KMC ICU 301 வது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கிருமி நோய் தொற்றால், "கடந்த 17 நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு, நினைவின்றி இருக்கிறார். எனது மனைவிக்கு, உரிய மேல் சிகிச்சை அளிக்க முதல்வர் ஜோசப் விஜய் உதவி வேண்டும்"" என தெரிவித்துள்ளார்.
நடிகர் முத்துக்காளை, விஜய் உடன் மின்சார கண்ணா, தமிழன், யூத், பகவதி, சுறா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நேரில் வந்த அமைச்சர்
இந்நிலையில் முத்துக்காளையின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை தொலைபேசியில் பேச வைத்தார். மருத்துவமனைக்கு அமைச்சர் ராஜ் மோகனை நேரடியாக அனுப்பி, நலம் விசாரித்து, உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!