
பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி
இந்நிலையில் நேற்று ஐதராபாத் சென்றிருந்த இந்தியப் பிரதமர் மோடி, பவன் கல்யாண் வீட்டிற்கு நேரில் சென்று அவரை நலம் விசாரித்துள்ளார். அப்போது பவன் கல்யாண், அவரது மனைவி, மகன்கள், மகள்கள் பிரதமரை வரவேற்றனர்.
பிரதமர் வருகை குறித்து பவன் கல்யாண், “இன்று எனது இல்லத்திற்கு வருகை தந்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி வருகையின்போது நிகழ்ந்த சில மறக்க முடியாத தருணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான, பெருமைக்குரிய மற்றும் நெஞ்சில் பதிந்த ஒரு தருணமாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பவன் கல்யாணை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி, “ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் இல்லத்திற்குச் சென்று, அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். பவன் கல்யாணிடம் நலம் விசாரித்து, அவர் நல்ல உடல்நலத்துடன் திகழ வாழ்த்தினேன்,” என்று பதிவிட்டுள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!