
கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா
இப்படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் மதுரையில் நடைபெற்ற போது படத்தின் கதாநாயகியான த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. அதன்பின் த்ரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதற்கு ரசிகர் ஒருவர் "இந்தப் படத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார் என்பதை மறந்துவிட்டேன்,” என்று கமெண்ட் அடித்ததற்கு, “நானும் மறந்துவிட்டேன். இப்போதாவது அவர்கள் ஒரு நினைவூட்டலை செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி,” என்று த்ரிஷா பதில் அளித்திருந்தார்.
"கருப்பு" இசை நிகழ்ச்சிக்கு த்ரிஷாவை அழைக்கவில்லை என்று தகவல் பரவியது. அது குறித்தும் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, “மெயிலில் எனக்கான அழைப்பு தொலைந்துவிட்டது என நினைக்கிறேன்,” என்று கமெண்ட் செய்திருந்தார் த்ரிஷா.
இதன் மூலம் கருப்பு குழுவுக்கும் த்ரிஷாவுக்கும் இடையே ஏதோ சண்டை என்பது தெரிய வந்தது. அந்தப் படம் பற்றி தனது சமூக வலைத்தளங்களில் எதையும் பகிராமல் இருந்தார் த்ரிஷா.
இந்நிலையில் ஒரு வாரமாக "கருப்பு" பற்றி இன்ஸ்டா தளத்தில் பகிர ஆரம்பித்துள்ளார். அவரிடம் பேசி சமாதானம் செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!