
பிளாஷ்பேக்: சினிமாவில் ஜெயிக்க முடியாத அன்னை இல்லத்து வாரிசு
சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும், அவரது மகன் துஷ்யந்தும் சில படங்களில் நடித்தார்கள். ஆனால் அவர்களால் ஜெயிக்க முடிவில்லை. இதேபோன்று அன்னை இல்லத்தில் இருந்து ஜெயிக்க முடியாத ஒருவர் இருக்கிறார். அவர் மனோ என்கிற மனோகர். இவர் சிவாஜியின் மூத்த சகோதரர் சண்முகத்தின் மகன். சண்முகம் தான் சிவாஜியின் வரவு செலவுகளை பார்த்துக் கொண்டவர், சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தை நிர்வகித்தவர்.
பிரபு நடித்த "பொண்ணு பாக்க போறேன்" என்ற படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்தார். அவரது ஜோடியாக சீதா நடித்தார். இந்த படத்தை என்.முருகேஷ் என்பவர் இயக்கினார், இந்த படத்தின் கதையை கே.பாக்யராஜ் எழுதி, இசை அமைத்தார். படம் போதிய வரவேற்பை பெறவில்லை. மனோவும் அதன் பிறகு நடிக்கவில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!