ஜனநாயகன் ரிலீஸ் தேதி இதுவா? புதிதாக கிளம்பியிருக்கும் தகவல்
Advertisement
Advertisement
ஜனநாயகன் ரிலீஸ் தேதி இதுவா? புதிதாக கிளம்பியிருக்கும் தகவல்
மே 08, 2026
அ நிறம் | அளவு
Advertisement
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகி இருக்க வேண்டியது. அப்படி பார்த்தால் நாளையுடன் படம் வெளியாகி 4 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். ஆனால் சென்சார் பிரச்னை, சட்ட சிக்கல்கள் காரணமாக இன்னமும் வெளியாகவில்லை. தமிழக சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் படம் வெளியாகும், மே 28 ரிலீஸ் என பல்வேறு தகவல்கள் கிளம்பின. ஆனால், இன்னமும் பட ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவில்லை. காரணம் படத்துக்கு இன்னமும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ஜூன் 22ம் தேதி ஜனநாயகன் வெளியாவது உறுதி என புது தகவல் வருகிறது. ஏன் என்று விசாரித்தால் அன்று விஜயின் 53வது பிறந்தநாள். தமிழக முதல்வராக அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள். அதனால், அன்றைய தேதியில் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து படத்தை தயாரித்த கே வி என் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வரவில்லை.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!