
கைவிட்ட கர, காப்பாற்றுமா கருப்பு
கடந்த வாரம் வெளியான நடிகர் தனுஷின் "கர" படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்த வருடத்தின் சினிமாவின் முதல் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "கர" படமும் கைவிட்டது.
இந்நிலையில் அடுத்த வாரம் சூர்யா நடித்துள்ள "கருப்பு" படம் வெளியாக உள்ளது. அவரும் முன்னணி நடிகர் என்பதால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு வழக்கம் போலவே இருக்கிறது. இருந்தாலும் கடந்த சில வருடங்களாகவே வெற்றிக்காகத் தடுமாறி வருகிறார் சூர்யா. அவருக்கும் இந்தப் படத்தின் வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த கோடை விடுமுறையை "கருப்பு" படமாவது நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் தியேட்டர்காரர்களும் நினைக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!