ஜனநாயகன் லீக் : கைதான 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
மே 02, 2026
Advertisement
சென்னை : ஜனநாயகன் படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் கசிய விட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனுக்களை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டு பொங்கலை முன்னிட்டு ஜன., 9ல் ரிலீஸாக இருந்த படம் ஜனநாயகன். தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் வெளியாகாமல் போனது. தொடர்ந்து வழக்கு என பல சிக்கல்களை இப்படம் சந்தித்தது. இந்த படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக்குழு முன் இருக்கும் நிலையில் ஏப்.3ம் தேதி சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து படத்தயாரிப்பு நிறுவனம், புகார் அளிக்க 21 பேர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஸ்ரீநாத், பாலகிருஷ்ணன், ருத்ரன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமின் அளிக்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில், இந்த வழக்கிற்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை, ஜாமின் அளிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. போலீசார் தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வக்கீல் தேவராஜன், பலகோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் இணையத்தில் வெளியிடப்பட்டதால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புலன் விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. எனவே ஜாமின் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், விஜயன் சுப்ரமணியன் கூறுகையில், சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட்டதால் பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜாமின் தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ். கார்த்திகேயன், குற்றச்சாட்டுகளின் தீவிரம், அவற்றின் தன்மை, புலன் விசாரணையின் தற்போதைய நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 9 பேரின் ஜாமின் மனுக்களையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!