தாயாகப் போகிறேன் : தாய்மையை அறிவித்த பிகில் நடிகை
மே 02, 2026
Advertisement
தமிழில் "பிகில்", "எப்.ஐ.ஆர்" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான். தற்போது விஜயின் ஜனநாயகன் படத்திலும் நடித்துள்ளார். "பிகில்" படத்தில் காதலனால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்து கால்பந்து வீராங்கனையாகச் சாதிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2022-ல் தனது நீண்ட நாள் காதலரான ஜோமான் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரேபா மோனிகா. இந்த நிலையில், தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது: "இருவராக இருந்து மூவராக மாறப் போகிறோம். கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருடைய அன்பும் வாழ்த்துகளும் இந்தச் சிறப்பான பயணத்தில் எங்களுக்குத் தேவைப்படுகிறது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்..

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!