
மே எனது மாதம்.... கூடவே ஹார்ட்டின் : திரிஷா பதிவு வைரல்
தன்னுடைய பிறந்தநாள் சில நாட்களில் வருவதை அடுத்து, மாதத்தின் முதல் நாளான நேற்று த்ரிஷா அவருடைய இன்ஸ்டா தளத்தில், "மே (எனது) சீசன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிவிட்டது” என குறிப்பிட்டு ஹார்ட்டின் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இது ஆயிரம் அர்த்தத்தை சொல்வதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோரை இணைத்து கடந்த சில வாரங்களாகவே கிசுகிசுக்கள் பரவி வருகிறது. இருவரும் ஒரு திருமணத்திற்கு ஒன்றாக சென்ற பிறகு அது உறுதியானது. இருந்தாலும் இருவரும் தங்களது உறவு பற்றி இதுவரையில் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.
த்ரிஷாவின் பிறந்தநாளான மே 4ம் தேதியன்று தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!