
சூப்பர்மேன் படத்தை இயக்கும் பெண் இயக்குனர்
டி.ஜீவிதா கிஷோர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், "3.33" என்ற படத்தை இயக்கிய நம்பிக்கை சந்துரு நாயகனாக அதாவது சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைள் தேர்வு நடந்து வருகிறது.
படம் குறித்து இயக்குனர் டி. ஜீவிதா கிஷோர் கூறுகையில், “பேண்டஸி மற்றும் சர்வைவல் கலந்த சுவாரஸ்ய கதைதான் "சூப்பர் பி மேன்". நிஜத்தன்மை கொண்ட சூப்பர் ஹீரோ கதையாகவும் அதேசமயம் விஷூவலாக ரசிகர்களுக்கும் புது அனுபவம் தர வேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம். புதிய நடிகர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக் குழுவுடன் உருவாக்கி வருகிறோம். புதிய ஜானர், திறமையான நடிகர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக்குழுவுடன், "சூப்பர் பி மேன்"தமிழ் ரசிகர்களுக்கு நியூ ஏஜ் சூப்பர் ஹீரோ அனுபவத்தை தர இருக்கிறது”என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!