
ரஜினி, விமல் சந்திப்பு பின்னணி என்ன
இது குறித்து விமல் தரப்பில் விசாரித்தால், இது திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல தற்செயலான சந்திப்பு. சென்னையில் உள்ள ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் ஜெயிலர் 2 வுக்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் சிம்புத்தேவன் இயக்கத்தில் விமல் நடிக்கும் படத்தின் டப்பிங் நடந்து கொண்டிருந்தது. இதை கேள்விப்பட்டு நடிகர் விமல் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்தித்தார். ரஜினியும் தனது வழக்கமான் அன்பு பாணியில் கட்டி அணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார், அந்த போட்டோ வைரலானது. விமல் ஹேப்பி. விரைவில் சிம்புதேவன் இயக்கத்தில் விமல் நடிக்கும் படம் பற்றிய விரிவான தகவல்கள் வெளியாகும் என்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்ஈரான் போர்நிறுத்தம் எப்படி செய்வது/ ஹோர்முஸ் நீர்முனையை எப்போது திறப்பது என்று ஆலோசனை செய்திருப்பார்கள் இரண்டு சினிமா கூத்தாடிகள் இன்னும் எப்படி சம்பாதிக்கலாம் என்றுதான் பேசுவார்கள் வெட்டி நியூஸ்