பிளாஷ்பேக் : படம் தயாரித்த காபி நிறுவனம்
ஏப் 28, 2026
Advertisement
சேலத்தை தலைமையிடமாக கொண்டு படங்களை தயாரித்த மாடர்ன் தியேட்டர் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே சேலத்தை தலைமையிடமாக கொண்டு படங்கள் தயாரித்த நிறுவனம் "நரசு ஸ்டூடியோ" பற்றி அதிகம் தெரியாது. 1950களில் இந்த நிறுவனம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியது.
அடிப்படையில் நரசுஸ் காபி நிறுவனம்தான் நரசு ஸ்டூடியோ மூலம் படங்களை தயாரித்தது. அந்த காலத்தில் காபி என்றாலே நரசுஸ் காபிதான் என்கிற அளவிற்கு பிரபலமாக இருந்த நிறுவனம். காபி நிறுவனம் தொடர்ந்து சேலத்தில் இருந்து செயல்பட்டது. நரசு ஸ்டூடியோ சென்னைக்கு மாற்றப்பட்டது. தற்போது கிண்டியில் கோலா கிரவுண்ட் என்று சொல்லப்படும் இடத்தில் நரசு ஸ்டூடியோ செயல்பட்டது. படத் தயாரிப்பில் இருந்து விலகியதும் அந்த இடம் கேம்ப கோலா நிறுவனத்திற்கு விற்கப்பட்டு விட்டது.
நரசுஸ் காபி நிறுவனத்தை 1926ம் ஆண்டில், "நரசு" என்று அழைக்கப்பட்ட லட்சுமி நரசிம்மனால் நிறுவப்பட்டது. பின்னர் சினிமா தயாரிப்பில் ஈடுபட்ட இந்த நிறுவனம், போர்ட்டர் கண்ணன், பிரேம பாசம், கூடி வாழ்தல் கோடி நன்மை, ஸ்ரீ வள்ளி கல்யாணம், ஸ்ரீவள்ளி உள்ளிட்டட பல படங்களை தயாரித்தது. "ஷரான் சி ஏஸ்" உள்ளிட்ட சில இந்திப் படங்களையும் தயாரித்தது. இந்த நிறுவனத்தின் அடுத்த தலைமுறையினர் சினிமா தயாரிப்பில் ஆர்வம் காட்டாததால் நரசு ஸ்டூடியோ விற்கப்பட்டு, காபி தயாரிப்பில் மும்முரமாக இறங்கியது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!