ராவடி படத்தின் டிஜிட்டல் உரிமையை கைபற்றிய ஹாட்ஸ்டார்
ஏப் 28, 2026
Advertisement
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிப்பில், அவரது மகன் எல்.கே.அக்ஷய் குமார் "சிறை" என்கிற படத்தில் அறிமுகமானார். இந்தபடம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே இருந்து அக் ஷய் குமாரை கதாநாயகனாக வைத்து "ராவடி" என்கிற படத்தையும், செவன் ஸ்கிரீன் நிறுவனம் லலித் தயாரித்து வருகிறார். இதை அறிமுக இயக்குனர் விக்னேஷ் வடிவேலு என்பவர் இயக்கியுள்ளார்.
இதில் அக்ஷய் குமார் உடன் மலையாள நடிகர் பசில் ஜோசப் நடிக்கின்றார். கதாநாயகியாக ஐஸ்வர்யா சர்மா நடிக்கிறார். ஜென் மார்டின் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் தரப்பு பார்த்துள்ளனர். ராவடி படத்தை பார்த்த இந்நிறுவனம் ரூ.10 கோடிக்கு டிஜிட்டல் உரிமையை கைபற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!