
‛கர படம் தனுஷ் தான் பொருந்தும் : விக்னேஷ் ராஜா
அப்போது ஒரு பேட்டியில் கர படம் அமைந்தது குறித்து அவர் கூறியதாவது, "போர் தொழில் படத்தை பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜ் என்னை லியோ படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டினார். அப்போது நடிகர் விஜயை சந்தித்தேன். ஆனால், அவர் போர் தொழில் படத்தை அப்போது பார்க்கவில்லை. அதேபோல் போர் தொழில் படத்தை பார்த்து சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் பாராட்டினார். என்னிடம் கதையும் கேட்டிருந்தனர். ஆனால், என்னிடம் இருந்த கர படத்தின் கதைக்கு தனுஷிற்கு தான் பொருத்தமாக இருக்கும் என்பதை சூர்யா, சிவகார்த்திகேயனிடம் கூறிவிட்டேன்" என தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!