
தமிழ் சினிமாவையும், தனுஷையும் கரை சேர்க்குமா கர ?
இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை. அதே சமயம், இளம் நடிகர்கள் நடித்த படங்கள்தான் வசூலைக் கொடுத்து தமிழ் சினிமாவைக் கொஞ்சம் காப்பாற்றியுள்ளன. அடுத்து சீனியர் நாயகி நடித்த படமும் நல்ல வசூலைக் கொடுத்தது. "யூத், வித் லவ், தாய் கிழவி" ஆகிய படங்கள்தான் அவை.
85 படங்களில் ஒரே ஒரு படமாக "பராசக்தி" படம்தான் 100 கோடியைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் படமும் வியாபார ரீதியாக லாபத்தைத் தரவில்லை என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
இந்நிலையில் தனுஷ் நடித்து வர உள்ள "கர" படம் 2026 தமிழ் சினிமாவை கரை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "குபேரா, இட்லி கடை" ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியாகவே அமைந்தன. அவரையும், "கர" கை கொடுத்து கரை சேர்க்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!