
அந்த தீம் மியூசிக் ஐடியா கொடுத்தவர் அஜித் : அமர்க்களம் ரீ ரிலீசில் இயக்குனர் சரண்
தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட இடங்களில் 200 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. அப்போது கூட இவ்வளவு தியேட்டரில் வெளியாகவில்லை. இன்றைய தலைமுறையினர் இந்த படத்தை எப்படி பார்க்கிறார்கள் என்பதை பார்க்க வந்தேன். அவர்கள் கனெக்ட் ஆகி வரவேற்றார்கள். அது எனக்கும் மகிழ்ச்சி. அஜித்தின் ஸ்டார் பவர், ரசிகர்கள் அன்பு இந்த படத்தில் தெரிந்தது.
அமர்க்களம் படத்தில் தான் அஜித் முதன்முறையாக ஆக் ஷன் ஹீரோவாக மாறினார். அதற்கு அவர் உயிர் கொடுத்தார். ஷாலினி நடிப்பும் பிரமாதமாக அமைந்தது. குறிப்பாக, படத்தின் தீம் மியூசிக் இன்றும் பாராட்டப்படுகிறது. அதற்கு ஐடியா கொடுத்தவர் அஜித்தான். மேகங்கள் என்னை தொட்டு பாடலை அப்படி மாற்றுங்கள் என்றார். அதேபோல் கணவர் சாய்ஸ் பற்றி ஒரு டயலாக்கை ஷாலினி சொந்தமாக பேசினார். அதற்கும் வரவேற்பு கிடைத்தது. இந்த நேரத்தில் படத்தை தயாரித்த வெங்கடேஸ்வரா நிறுவனம், படத்துக்கு உயிர் கொடுத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு நன்றி. டிஜிட்டல் தளத்தில் படம் நன்றாக வந்துள்ளது. சவுண்டு குவாலிட்டியும் பக்காவாக அமைந்துள்ளது"" என்றார்.






















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்அப்ப தீனா என்ன குடும்ப படமா