
பெத்தி படத்தில் சம்யுக்தா
கடந்த மாதமே படம் வெளியாக வேண்டியது. பட பணிகள் முடியாததால் இம்மாதம் ஏப்., 30ல் ரிலீஸ் என அறிவித்து இருந்தனர். தற்போதும் பட பணிகள் முடியாததால் தேதி குறிப்பிடாமல் ஜூன் மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. நீண்ட நாட்களாகவே இதில் ஒரு சிறப்பு பாடல் இடம் பெறுகிறது என்றும், அதில் நடனமாட தமன்னா, பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர் ஆகியோரிடம் பேசியதாக தகவல் வந்தது.
இறுதியாக ‛கபுள் பிரண்ட்லி" படத்தின் மூலம் பிரபலமான மானஷா வாரணாசி ஆடுவார் என கூறப்பட்ட நிலையில் அவரும் சம்மதிக்கவில்லையாம். இப்போது தனுஷின் வாத்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா மேனனிடம் பேசி உள்ளனராம். இவர் நடனம் ஆடுவது உறுதியாகி உள்ளது என்கிறார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!