
‛ஜனநாயகன் அப்டேட் என்ன...? எப்பதான் படம் ரிலீஸ்?
ஏப்ரல் 30ல் ரிலீஸ் ஆகுமா என்று விசாரித்தால், வரும் சனிக்கிழமை ஜனநாயகன் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், படத்தின் வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பெங்களூரில் உள்ள அந்த கம்பெனி தலைமை அலுவலகம் சென்று முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தி, பட ரிலீஸ் குறித்து முடிவெடுக்க உள்ளனர். விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டால் ஏப்ரல் 30ல் ரிலீஸ் செய்வோம். இல்லாவிட்டால், தேர்தல் ரிசல்ட் வந்தபின் மே 4க்கு பின் படத்தை ரிலீஸ் செய்வோம் என்று அப்போது முடிவெடுக்கப் போகிறார்களாம்.
ஆனால், ஒரு தரப்போ, தேர்தல் ரிசல்ட் வந்தபின் படத்தை ரிலீஸ் செய்வது ரிஸ்க். அது படத்தின் வியாபாரத்தை பாதிக்கும். தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்பே ஜனநாயகனை ரிலீஸ் செய்தால் ஓரளவு வசூல் பார்க்க முடியும் என்கிறார்களாம். அதேசமயம் பெங்களூரில் மீட்டிங்கில் பழைய விலைக்கு ஜனநாயகனை ரிலீஸ் செய்ய முடியாது. அது கடும் நஷ்டத்தை ஏற்படுத்தும். புதிய வியாபார ஒப்பந்தம் போட வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் பட குழுவுக்கு பிரஷர் கொடுக்கப் போகிறார்களாம். தேர்தல் முடிந்தபின் விஜய் ஓய்வெடுக்க வெளிநாடு போக வாய்ப்பு என்பதால் அவரை யாராலும் சந்திக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்இனி வயசுக்கு வந்தால் என்ன, வராட்டி என்ன!!