
விவாகரத்து வழக்கு : விஜய், சங்கீதா ஜூன் 15ல் ஆஜராக உத்தரவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது "தமிழக வெற்றிக் கழகம்" என்ற அரசியல் கட்சி துவங்கி சட்டசபை தேர்தலில் களம் காண்கிறார். சமீபத்தில் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நடிகர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், தன்னையும், மகன், மகள் ஆகியோரை அவர் பார்த்துக் கொள்வதில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு ஏப்.,20 (இன்று) விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் காணோளி வாயிலாக ஆஜராக அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் ஜூன் 15ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது.
முன்னதாக விஜய் - சங்கீதா ஆகியோரை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்து வந்தன. அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் சங்கீதாவுக்கு விவாகரத்து வழங்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!