
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: சமாதானம் தோல்வி, செட்டில்மென்டில் சிக்கல்
சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது "தமிழக வெற்றிக் கழகம்" என்ற அரசியல் கட்சி துவங்கி சட்டசபை தேர்தலில் களம் காண்கிறார். இதற்கிடையே விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நடிகர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகவும், தன்னையும், மகன், மகள் ஆகியோரையும் அவர் பார்த்துக்கொள்வதில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு ஏப்.,20 (நாளை) விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, விஜய், சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே விஜய் - சங்கீதா ஆகியோரை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்து வந்தன. அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் சங்கீதாவுக்கு விவாகரத்து வழங்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சமாதான முயற்சியின் போது, விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பு அடிப்படையில், தனக்கு, தனது மகன், மகளுக்கு சேர்த்து ரூ.250 கோடி செட்டில்மென்ட் வேண்டும் என சங்கீதா தரப்பு கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்த விஜய், ரூ.35 கோடி மட்டும் வழங்க சம்மதம் தெரிவித்ததுடன், மகன், மகளை தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளாராம். இந்த செட்டில்மென்ட் சிக்கல், நாளை இந்த விவாகரத்து வழக்கிலும், ஏப்.,23ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் விஜய் எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.





















வாசகர்கள் கருத்துகள் (2)
கருத்து எழுதுங்கள்she took responsibility to raise children? then she should pay? she has a businessman father?
மகன், மகளுக்கு இதுவரை படிக்க பணம் கொடுக்கவில்லை, எப்படி பாத்துகொள்ளப்போகிறார்.
do you know that vijai has not taken care of their children education ?