
தயாரிப்பாளர் ஆக நயன்தாரா ஜெயித்தாரா?
இது குறித்து பேசியுள்ள விக்னேஷ்சிவன், முதலில் 200கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இந்த படத்தை தொடங்கினோம். அடுத்து 150 கோடி ஆனது. அப்பவும் பல பிரச்னைகள், ஓடிடி பிஸினஸ் ஆகவில்லை. 100கோடிக்கும் குறைவாக படத்தை எடுக்க வேண்டிய நிலை. அப்போது நயன்தாரா தயாரிப்பாளராக படத்துக்குள் வந்தார். மூக்குத்தி அம்மன் 2 படம் உட்பட பல படங்களுக்குதான் வாங்கிய சம்பளத்தை கொடுத்தார் " என்றார்.
இப்போது எல்ஐகே படம் 50 கோடியை தாண்டியுள்ளது. தயாரிப்பாளராக நயன்தாரா ஜெயித்துவிட்டாரா என்றால், அது இன்னும் நடக்கவில்லை. இன்னும் படம் ஓடினால் மட்டுமே அவருக்கு போட்ட முதல் கிடைக்கும். தனது காதல் கணவருக்காக பல கோடி கொடுத்துள்ளார் நயன்தாரா. அடுத்தும் விக்னேஷ் இயக்கும் படத்தை, நயன்தாரா தயாரிப்பாரா? அல்லது நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சினிமாவில் போடமாட்டேன் என்று சொல்வாரா?






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!