
பிறந்தநாளில் வந்த ‛விக்ரம் 63 பட அறிவிப்பு
இந்நிலையில் ஏற்கனவே விக்ரமை வைத்து ‛இருமுகன்" படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர், விக்ரமின் 63வது படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வந்தன. இன்று விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அந்த அறிவிப்பை மாலை ஒரு வீடியோ உடன் வெளியிட்டனர். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
ஒரு பூட்டிய அறையில் விக்ரம் உள்ளே இருக்க அவரை எதிரிகள் வெளியில் சூழ்ந்து கொண்டு கதவை உடைக்க முயற்சிக்கின்றனர். அது முடியாமல் போக நாட்டு வெடிகுண்டுகளை உள்ளே வீசுகின்றனர். உள்ளே விக்ரம் கூலாக புகைப்பிடித்தப்படி அமர்ந்திருப்பது போன்று இந்த அறிமுக வீடியோ உள்ளது.
வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=VL34SYoMS_g





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!