விஜய் சேதுபதியின் டிரைன், ஸ்லம்டாக், எப்போது வரும் ?
ஏப் 17, 2026
Advertisement
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து மாறுபட்ட கதைகளில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அவருக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி வைத்திருக்கிறார்.
அவர் நடித்து இந்த வருடம் வெளிவந்த மவுனப் படமான "காந்தி டாக்ஸ்" வந்தது தெரியாமல் போனது. அதற்கடுத்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள "டிரைன், ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு" ஆகிய படங்கள் எப்போது வரும் என்பது குறித்து எந்த அப்டேட்டும் இல்லை.
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள "டிரைன்" படம் 2023ல் ஆரம்பமானது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்டார்கள். இந்த வருடத் துவக்கத்திலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம்.
தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவான "ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு" படம் கடந்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பமானது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைய உள்ளன. இப்படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் முந்தைய தோல்விப் படங்களான "லைகர், டபுள் ஐஸ்மார்ட்" ஆகிய படங்களின் நஷ்ட ஈடு காரணமாக இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க முடியாமல் உள்ளதாம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தகவல்.
விரைவில் இந்தப் படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!