
செட்டில் பண்ண வேண்டி இருக்கு, படத்தை ஓட வையுங்க : இயக்குனர் விக்னேஷ் சிவன்
இதில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், ஹீரோயின் கிர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் அனிருத், படத்தின் தயாரிப்பாளர் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் வரவில்லை. இந்த விழாவில் தனக்கே உரிய காமெடி ஸ்டைலில் பேசினார் விக்னேஷ் சிவன்.
அவர் பேசுகையில் ""இந்த படம் பற்றி இன்ப்ளூயன்சர்கள் தவறாக எழுதுகிறார்கள். அவர்களுக்கு செலவழிக்க எங்களிடம் பணம் இல்லை. ஏதாவது முன்னபின்ன எழுதி இந்த படத்தை ஓட வையுங்க. இப்ப தம் லைன் கலாச்சாரம் அதிகரிக்கிறது. மேடையில் கதறி அழுத விக்னேஷ் சிவன், மேடையை உடைத்தார் என ஏதாவது போட்டு படத்தை ஓட விடுங்க. படம் கேவலமாக இருக்கிறது வீடியோ ஆரம்பித்து, உள்ளே நல்லவிதமாக பேசுறாங்க. அதை எப்படி கையாளுவது என எனக்கு தெரியலை. ஏன்னா, நான் இன்னும் செட்டில்மென்ட் பண்ண வேண்டியது இருக்கிறது. இந்த வாரம் படம் ஓடிவிடும். அந்த பணம் கிடைத்துவிடும்னு பலர் காத்திருக்கிறார்கள். இந்த படத்தை ஓட வையுங்க. அப்படி ஓட விட்டால் ராமசாமி கதைதான். அந்த பணம் ஊ....ஊதான். என்னை உங்க வீட்டு பிள்ளையாக நினைத்து படத்தை ஓட வையுங்க.
நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதாவது குறை சொல்லிட்டே இருக்காங்க. நான் கேசரி செய்தால் ஏன் காரமாக இல்லைனு கேட்கிறாங்க. நான் சிக்கன் குழம்பு வைத்தால் ஏன் இனிப்பாக இல்லை என்கிறார்கள். படத்துல நல்ல விஷயங்கள் இருக்கிறது. என்னால் பயங்கரமாக படம் எடுக்க தெரியாது. உங்களுக்கு பயங்கரமாக கோபம் வந்தால் மனசுக்குள்ள வெச்சுக்கோங்க . என்னிடம் போனில் பேசுங்க. நேரில் பார்க்கும்போது உங்க கருத்தை தெரிவியுங்க. ஏன்டா இப்படி பண்ணினேனு கேளுங்க. ஒரு வீடியோ போட்டு ஏதாவது செய்யாதீங்க. மீண்டும் சொல்கிறேன் , எனக்கு செட்டில் பண்ண வேண்டியது நிறைய இருக்கிறது. படம் நல்லா ஓடணும்.
எங்கள் ஹீரோ செல்லக்குட்டி பிரதீப்பின் இந்த படமும் 100 கோடியை அள்ளியதுனு போஸ்டர் ஓட்டணும். அதுக்கு படத்தை ஓட வையுங்க"" என்றார் . மேலும் அவர் என் நண்பர் எச்.வினோத் இயக்கிய ஜனநாயகன் படம் லீக் ஆகியுள்ளது. அந்த கஷ்டம் கொடுமையானது. அது மரணவலி போன்றது" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!